31.9 C
Chennai
Thursday, Aug 21, 2025
scalp 1 09 1462795547
தலைமுடி சிகிச்சை

தலையில் ஏற்படும் அதிக அரிப்பை குறைக்க இத முயற்சி பண்ணுங்க!

எங்கேயாவது பொதுஇடத்தில் தலைமுடியையே பிச்சுக்கச் செய்வது போல் அரிப்பு வந்தால் , சற்று தர்ம சங்கடமான நிலைதான். இதனை எப்படி தடுப்பது ?கவலை வேண்டாம். உங்கள் கையிலேயே தீர்வுகள் உள்ளன.

தலையில் எதனால் அரிப்பு ஏற்படுகிறது?

தலைமுடி வறண்டு காணப்பட்டாலும்,சுத்தமாக பராமரிக்கவில்லையென்றாலும், டென்ஷன், பொடுகு, மற்றும் சரியான டயட் இல்லாமல் இருந்தாலும் தலையில் அரிப்பு ஏற்படும். இதற்காக கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்.நீங்கள் அழகிய கூந்தலுக்கு சொந்தமாவீர்கள்.

தேயிலை எண்ணெய் :

தேயிலை எண்ணெய் , தலை அரிப்பிற்கு சிறந்த தீர்வாக அமையும். இது தலையில் ஏற்படும் பூஞ்சைக்கு எதிராக செயல்படும். கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும். 15-20 சொட்டு தேயிலை எண்ணெயை ,தரமான ஷாம்புவுடன் கலந்து தினமும் தலைக்கு குளிக்கலாம்.அல்லது ஏதாவது எண்ணெயுடன் கலந்து தலையில் தடவி ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து குளிக்க வேண்டும். தினமும் இவ்வகையில் செய்தால் தலை அரிப்பு நின்று விடும்.

சோடா உப்பு:

சோடா உப்பு சமையலில் மட்டுமல்ல , சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் பொருளாகும். அவை தலையில் உருவாகும் கிருமிகளைத் கொல்லும். தலைமுடிக்கு வலுவளித்து ஸ்கால்ப்பினை உறுதி பெறச் செய்யும். தலையில் முதலில் ஆலிவ் எண்ணெயை தடவி அதன் பின் சோடா உப்பினை நீரில் கலந்து பேஸ்ட் செய்து அதனை கூந்தலின் வேர்க்கால்களில் நன்கு படும்படி தடவ வேண்டும். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

சோற்றுக் கற்றாழை :

சோற்றுக் கற்றாழை தலைமுடி வறண்டு போவதை தடுக்கும் அற்புத மாய்ஸ்ரைஸர் . பொடுகினை அகற்றும். சோற்றுக் கற்றாழையில் உள்ள சதைப் பகுதியினை எடுத்து முடியின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். நன்றாக காய்ந்த பின் 1 மணி நேரம் கழித்து கூந்தலை நன்றாக கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்தால் நல்ல பலனைத் தரும்.

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு:

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு கலந்து முடியில் நன்றாக தேய்த்து வந்தால் , பொடுகு ,வறட்சி ஆகியவை போய்விடும்.இரந்த செல்களை எலுமிச்சை சாறு எளிதில் அகற்றும். மயிர்க்கால்கள் உறுதி பெறும்.

தலையில் ஏற்படும் அரிப்பு போதுவானதே. கூந்தலை சுத்தமாக , முறையாக பராமரித்து மேற்கூறிய முறைகளை தவறாமல் உபயோகித்தால் ஓரிரு வாரங்களிலேயே அரிப்பு காணாமல் போய்,அழகான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.

scalp 1 09 1462795547

Related posts

கூந்தல் எண்ணெய் பசை நீங்க

nathan

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

nathan

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

nathan

கொலாஜன் ஹேர் மாஸ்க்! முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரொக்கியமாக இருக்கும்.

nathan

முடியின் வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்

nathan

இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் உங்க முடியை வேகமா வளர வைக்குமாம்!

nathan

மென்மையான கூந்தலுக்கு…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்…

nathan

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan