கடையில் விற்கும் ரசாயனம் கலந்த செயற்கையான ஹேர் டை உபயோகிப்பது நம்ம அம்மா காலத்தோடு போய் விட்டது. இப்போது மக்கள் உஷாராகி இயற்கையை நாட ஆரம்பித்தாயிற்று. நீங்கள் இன்னும் செயற்கை டையிலேயே இருந்தா எப்படி ஃப்ரண்ட்ஸ்? நீங்களும் இயற்கைக்கு மாறிடுங்க.
டீன் ஏஜ் வயதினரும் கூந்தலின் நிறத்தை மாற்ற வித விதமான கலரிங் பயன்படுத்துகிறார்கள். இதனால் வரும் ஆபத்தினை அவர்கள் அறிவதில்லை செயற்கை கலரிங் உபயோகித்தால் கூந்தல் பலவீனமாகும். அலர்ஜி, சரும உபாதைகள், கண் பாதிப்பு ஆகியவைகளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். சிலவகை டை களில், குளுடன் என்ற ரசாயனம் உள்ளது. அது அலர்ஜியை உருவாக்கும்.
2005 ஆம் ஆண்டு "பப்ளிக் ஹெல்த்" ரிபோர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வில் ரசாயனம் கலந்த டை உபயோகிப்பதால் கொடிய நோயான புற்று நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளது என கூறியுள்ளது. ‘இன்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜி ‘ என்னும் இதழ் 2013 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் செயற்கை டை உபயோகப்படுத்தும் சுமார் 263 பேர்களில் 63 %தலைவலிகளால் பாதிக்கப்படுவதாகவும், 38 சதவீதம் அரிப்பாலும், 96 சதவீதம் தலைமுடி மிகவும் பலவீனமடைந்ததாகவும் கூறியுள்ளார்கள்.
இதெல்லாம் பார்த்த பிறகும் நீங்க ரசாயன டை உபயோகிப்பீர்களா? பின்னே கலர் கலராய் கலரிங் மற்றும் நரை முடியை மறைக்க என்ன பண்ணுவது எனக் கேட்கிறீர்களா?
இதோ உங்களுக்காக வீட்டிலேயே செய்யக் கூடிய இயற்கையான சாயங்கள்.
எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சூரிய ஒளி கூந்தலில் படுபோது அதன் ஒளியை முழுவதும் உட்கிரகிக்க உதவி புரிகிறது.
தேங்காய்ப் பால் :
தேங்காய் பால் இந்த கலவையிலுள்ள அமிலத்தன்மையை சமன்படுத்தி சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. கூந்தலுக்கு போஷாக்கை தரும்.
இயற்கையான சீமை சாமந்தி ஹேர் கலரிங்:
தேவையானவை :
சூரிய ஒளி – நிறைய சுடு நீர் – 2 கப்பிற்கும் கொஞ்சம் அதிகமாய் சீமை சாமந்தி டீ பேக்(Chamomile tea bags ) -6-10. எலுமிச்சை சாறு -அரைக்கப் தேங்காய் பால் – கால் கப்.
சூரிய ஒளி :
சூரிய ஒளியானது கூந்தலின் நிறத்தை இலகுவாக்குகிறது. கூந்தலுக்கு உயிரில்லாததால் அதன் நிறத்தை வெளுக்கச் செய்கிறது.
சீமை சாமந்தி :
சீமை சாமந்தி அற்புத மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. அதோடு அது சிறந்த ஹேர் ப்ளீச் ஆகும். உங்களுக்கு தங்க நிறத்தில் மின்னும் மிருதுவான கூந்தல் வேண்டுமென்றால் இந்த சாயம்தான் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். சீமை சாமந்தி கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கிறது என 2010 ஆம் ஆண்டு மாலிக்யுலார் மெடிக்கல் ரிவ்யூ என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
சீமை சாமந்தி சாயம் செய்யும் முறை :
நீரினை கொதிக்க வைக்க வேண்டும். நல்ல கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். கொதிக்க வைத்த நீரில் சீமை சாம்ந்தி டீ பேக்கை அமிழ்த்தவும். இது சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் . Chamomile tea bags என்று கேட்டு வாங்குங்கள். ஒரு 10 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூனைக் கொண்டு டீ பேக்கை அமுத்தவும். இதனால் டீ பேக்கினில் இருக்கும் பொடி நீருடன் கலக்கும். பிறகு அதினுள் எலுமிச்சை சாறும், தேங்காய் பாலும் கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்க வேண்டும். இப்போது இந்த கரைசலை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை முழுவதும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சூரிய ஒளியில் 15 நிமிடங்கள் அமர வேண்டும். அதற்கு மேல் அமர வேண்டாம். பின் ஷாம்பு வை உபயோகித்து தலைமுடியை அலசுங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தேன்-தேங்காய் பால் கலரிங் : தேன்- அரை கப் தேங்காய் பால் -அரை கப்
தேன் இயற்கையிலேயே ஹைட்ரஜன் பெராக்ஸைடை கொண்டுள்ளது . இது கூந்தலின் நிறத்தை மாற்றும். தேங்காய் பால் இயற்கையான மாய்ஸ்ரைசர். அது தேனின் செயலை தூண்டுகிறது. இதனால் கூந்தலின் நிறம் வேகமாக மாறுகிறது. தேன் மற்றும் தேங்காய் பாலை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை கூந்தலின் மயிர்கால்களில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம். நீங்களே மாற்றத்தை கவனிப்பீர்கள்.
காபி ஹேர் டை :
காபி ஸ்ட்ராங்கா குடிக்க மட்டும்தானே செஞ்சிருப்பீங்க. இப்போ ஹேர்டையும் செஞ்சு பாருங்க.
தேவையானவை :
சுடு நீர் – 2 கப் காபி பொடி தரமானது -10 டேபிள் ஸ்பூன் காபிப் பொடி டானின்ஸ் என்ற பொருறை கொண்டுள்ளது.அது நிறத்தை கருப்பாக்கும்.ரொட்டீனாக காபிப் பொடியை கூந்தலுக்கு பயன்படுதும்போது அது கூந்தலில் ஊடுருவி கருமை நிறம் அளிக்கும்
செய்முறை :
நீரினை கொதிக்க வைக்கவும். பின் அடுப்பை குறைத்து, காபிப் பொடியை அதில் போடவும். மேலும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு ஆற வைத்து, அதனை தலை முடி முழுவதும் படும்படி தடவவும். தலைமுடி முழுவதும் காபி நீரில் ஊறிய பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரினால் தலை முடியை கவர் செய்யவும். ஒன்றரை மணி நேரம் கழித்து தரமான ஷாம்புவினால் முடியை அலசவும். வாரம் மூன்று முறை செய்யலாம்.
வால் நட் பொடி கலரிங் (அலசுவதற்கு மட்டும்) : வாதுமைக் கொட்டையில் உள்ள டானின்ஸ், ஜக்லோன் போன்ற பொருட்கள் கூந்தலின் நிறத்தினை அடர் நிறத்திற்கு மாற்றும். சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
தேவையானவை :
சுடு நீர் -2 கப் கருப்பு வால் நட் பொடி -6-10 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
நீரினை கொதிக்க வைக்க வேண்டும். அதில் கருப்பு வால் நட் பொடியை போட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அதனை கூந்தல் முழுவதும் தடவி ஊற வைக்கவும். அதனை நீரினைக் கொண்டு அலச வேண்டும் என்பதில்லை, அப்படியே விடலாம். அது சௌகரியமாய் இல்லாதவர்கள் 20 நிமிடங்கள் கழித்து, லேசாக அலசலாம்.