26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
கூந்தல் பராமரிப்புஹேர் கண்டிஷனர்

கூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி?

28-1390890568-2-hairmaskமுதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும் சீப்பை எடுத்துக் கொள்ளவும்.

• முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி சிக்கை நீக்கிக் கொள்ளவும்.

• முடியை வெதுவெதுப்பான நீரில் 30 வினாடிகள் நன்கு நனைக்கவும்.

• முடியின் நீளத்திற்குத் தக்கபடி, உள்ளங்கையில் ஷாம்புவை எடுத்துக் கொள்ளவும்.

• தலையின் உச்சியில் ஷாம்புவை தடவி, தலை முழுவதும் விரல் நுனிகளால் மசாஜ் செய்து, பின் முடி நுனி வரை தேய்க்கவும்.

• பின் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு முழுவதும் நீங்கும் வரை நன்கு அலசவும்.

• இப்பொழுது சிறிது கண்டிஷனரை, உள்ளங்கையில் விட்டு, இரண்டு கைகளால் தடவி, கூந்தல் முழுவதும் தடவ வேண்டும். குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படியாக தடவக் கூடாது.

• 2 முதல் 3 நிமிடங்கள் வரை கண்டிஷனரைத் தலையில் முழுவதும் பரவும் படி மெதுவாக விரல்களால் நன்கு தேய்த்துக் கொண்டிருக்கவும்.

• இப்பொழுது தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், கண்டிஷனர் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு அலசவும்.

• இறுதியாகக் குளிர்ந்த நீரால் வேகமாக அடிக்கவும். அப்பொழுதுதான் தலையில் உள்ள மயிர் துவாரங்கள் அடைபட்டு, கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பைத் தரும்.

• தலைமுடியின் ஈரத்தை ஒரு துணியால் ஒற்றி எடுக்கவும். முடியைப் பிழியக்கூடாது.

• முடியைக் காற்றிலேயே உலர விடுவதுதான் ஆரோக்கியமானது. ஹேர் ட்ரையர் மூலம் உலர வைப்பதால் முடி வறண்டும் சுருண்டும் போகும்.

Related posts

இந்த எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்…! உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவும்…

nathan

உங்களது கூந்தல் அதிகமாக கொட்டுகின்றதா

nathan

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

nathan

ஹேர்கலரிங் – ஒரு நிமிடம்..

nathan

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சில மூலிகை லோஷன்

sangika

பட்டுப்போன்ற தலை முடிக்கு முட்டை ஹேர் பேக்

nathan

முடி கொட்டுவதை தடுக்க சிறந்த தைலம்!….

sangika

தவறான வழியில் சீப்பை உபயோகிப்பதாலும் அதிகமான முடியை இழக்க நேரிடும்….

sangika

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika