31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இதனால் நரை முடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா:

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.

வெந்தயம்:

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊறவைத்தோ அல்லது அதனை இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரைமுடி மறையும்.

மிளகு:

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊறவைத்து அலசவேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ

1 கப் ப்ளாக்டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊறவைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Related posts

நரை முடிக்கும், மாரடைப்புக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!

nathan

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை

nathan

தலைமுடி கொட்டுவதற்கு ஐந்து முக்கிய காரணங்கள்!

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan

அடர்த்தியான தலைமுடிக்கு

nathan

உங்களுக்கு முடி கொட்டாம இருக்கணுமா? அப்ப ஷாம்புவ இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? |

nathan