31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
தலைமுடி சிகிச்சை

கருகரு கூந்தலுக்கு கறிவேப்பிலை

உணவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் கறிவேப்பிலை. கொசுறாக வாங்கினாலும் அதன் பலன்களோ மிக மிக அதிகம். தமிழர்கள் இதன் பெருமையை அறிந்திருப்பதால்தான் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர் என அனைத்திலும் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர். கறிவேப்பிலை மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது.

உலர்ந்த கறிவேப்பிலையை நன்றாகப் பொடிசெய்து, மிளகாய் வற்றல் பொடி அல்லது மிளகுத் தூளுடன் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, சீரகம், சுக்குப்பொடி ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து, நன்றாக அரைத்துப் பொடித்து, சிறிதளவு நெய் விட்டு இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், மந்தம், மலக்கட்டு ஆகியவை சரியாகும்.

கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் கலந்து சாப்பிட, சுவையின்மை, கழிச்சல், பித்த வாந்தி, செரிமானப் பிரச்னை போன்றவை குணமாகும்.

சித்த மருத்துவமுறையில் தலைமுடிக்குத் தயாரிக்கும் தைலத்தோடு, கறிவேப்பிலையைச் சேர்த்துக் காய்ச்சித் தடவினால், தலைமுடி நன்றாக வளருவதோடு கருமையாகவும் இருக்கும்.

அரிசியோடு கறிவேப்பிலையைச் சேர்த்து உரலில் குத்தி, நன்றாகப் புடைத்து, பழுத்து உலர்ந்த ஒரு மிளகாயைச் சேர்த்துக் கருக்கி, வசம்புச்சாம்பல், சிறுநாகப்பூ, அதிவிடயம் சேர்த்து, நீர்விட்டு, சுண்டக்காய்ச்சிக் குடித்தால், அஜீரணம், வயிற்றுப்போக்கு குணமாகும்.
இரண்டு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை காம்பு நீக்கி, ஒரு பாத்திரத்தில் சுமார் 400 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, நீர் பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டி, மூன்று வேளையும் சுமார் 50 மி.லி குடித்துவந்தால், சளி, இருமல் குணமாகும்.

பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது கறிவேப்பிலை. கறிவேப்பிலைக்கு நல்ல மணம் உண்டு. வீட்டின் முன்புறம், பின்புறம் என ஏதாவதோர் இடத்தில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்பது நல்லது.

Related posts

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

nathan

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தலை முடி கொத்து கொத்தா கொட்டுகிறதா..?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

இயற்கையான முறையில் பொடுகு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காய்கறிகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஷாம்புக்கு பதிலா இந்த ஒரு பொருள தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்!

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

இந்த பழக்கங்கள் உங்கள் கோடைகால முடி ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுத்துவிடும்.

nathan