இரண்டு கண்கள், ஒரு மூக்கு, ஒரு வாய் ஆனால் முகத்துக்கு முகம் எத்தனை வித்தியாசம். அதே போல் விரல்களின் அமைப்பால் கைகளும் மாறுபடுகின்றன. விரல்களுக்கேற்ப நகத்தை அமைத்துக் கொள்வது தான் விரல்களுக்கு அழகு!
தடித்த குட்டையான விரல்கள்:
நகத்தை, நீண்ட வட்ட வடிவில் (oval shape) வெட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் விரல்கள் நீளமாக மட்டுமின்றி மெல்லியதாகவும் தோற்றமளிக்கும்.
நீண்ட மெலிந்த விரல்கள்:
இந்த வகையான விரல்களின் அமைப்பே அழகானது என்றாலும், அளவுக்கதிகமாக நீண்ட தோற்றத்தை அளித்தால் அந்த அழகு குறைந்துவிடும். உங்கள் நகங்களை சதுரமான முனைகள் உள்ளவாறு வெட்டிக்கொண்டால் உங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்கும்.
தடித்த நீண்ட விரல்கள்:
இந்த வகையான அமைப்பு உள்ள விரல்களுக்கு வட்ட வடிவில் உள்ள நகங்கள் சிறந்தது. அது உங்கள் விரல்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும். மற்றும் இது போன்ற விரல் அமைப்பு கொண்டவர்கள் நகத்தின் நிறத்திலேயே இருக்கும் “நெயில் பாலிஷ்” உபயோகிப்பது சிறந்தது.