26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
sandalwood face pack
சரும பராமரிப்பு

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

பெண்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தரும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்கவும் வல்லது.

* சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

* எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

* தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

* முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

* சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

* பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள் sandalwood face pack

Related posts

தெரிஞ்சிக்கங்க…சன்ஸ்க்ரீன் பற்றி மக்கள் மனதில் இருக்கும் சில தவறான கருத்துக்கள்!

nathan

இதெல்லாம் முகத்துக்கு போட்டா அவ்ளோதான்? ஏன் தெரியுமா?

nathan

உங்களுக்கு அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..?அப்ப இத படிங்க!

nathan

இதை உபயோகித்த சிறிது நாட்களிலேயே உங்கள் சரும மாற்றத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!…

sangika

கருவளையும், கழுத்தும் கருமையும் இருந்த இடம் காணாமல் போக

nathan

நீங்கள் உருளைக்கிழங்க இப்படி பயன்படுத்தி பாத்திருக்கீங்களா?அப்ப இத படிங்க!

nathan

சோர்ந்து காணப்படும் சருமத்தை பளிச்சென்று மாற்ற சில வழிகள்

nathan

என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

nathan