பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானும் நடிகை கரீனா கபூரும் மும்பையின் பாந்த்ராவில் வசிக்கின்றனர். நேற்று இரவு, சைஃப் அலி கான் வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் திருடும் நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார். இதை கவனித்த நடிகர் சைஃப் அலி கான், அந்த நபரைப் பிடிக்க முயன்றார். பின்னர் அந்த நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். முதுகெலும்பு மற்றும் மார்பு உட்பட ஆறு காயங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு ஆழமான கத்தி வெட்டுக்கள் இருந்தன. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக, லீலாவதி மருத்துவமனை நிர்வாகம், சைஃப் அலி கானின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இல்லை என்றும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்: குற்றவாளியின் புகைப்படம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை அடையாளம் கண்டுவிட்டதாக போலீசார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சந்தேக நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
அதிகாலை 2:33 மணிக்கு சைஃப் அலி கானின் வீட்டிற்குள் சந்தேக நபர்கள் படிக்கட்டுகளில் இறங்கி நுழைவதைக் காட்டும் படங்கள் வெளியிடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சத்குரு ஷரன் கட்டிடத்தின் 12வது மாடியில் உள்ள நடிகரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஊடுருவியவர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழையவில்லை என்றும், மாறாக நள்ளிரவில் உள்ளே நுழைந்திருக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.