kTUXwGN
ஃபேஷன்

இது புதுசு மிரட்டும் பாகுபலி கொலுசு…

பாகுபலி பிரம்மாண்டத்தின் அடையாளமாக மாறிவிட்டது. இந்த பிரம்மாண்டப் பிசாசு தான் இப்போது மார்க்கெட்டிங் தந்திரமாக உருவெடுத்துள்ளது. வெள்ளி, தங்கம் இந்த இரண்டும் விலை ஏற்றம், இறக்கம் எல்லாம் தாண்டி எப்போதும் பெண்களின் மேனியில் ஜொலித்து அழகூட்டுபவை. இவற்றை அணிந்து கொள்வதே பல பெண்களுக்கு அடையாளம். அதையும் பிரம்மாண்டமாகவும், தனித்துவமாகவும் அணிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் யார் விடுவார்கள்.

பெண்களின் மனநிலையை பல்ஸ் பிடித்துப் பார்க்கத் தெரிந்த ஒரு நிறுவனம், சேலத்தில் பாகுபலி டிசைன் கொலுசுகளை அறிமுகம் செய்துள்ளது. ஒன்றரை கிலோ எடையில் பாகுபலி கொலுசு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை தான் அம்மாடியோவ் …. ரூ. 65 ஆயிரம். பாகுபலி கொலுசில் ஜொலிக்கும் கற்கள், மினுக்கும் எனாமல் பூச்சு, அடர்ந்த முத்துக்கள் என இந்தக் கொலுசை போட்டுக் கொண்டு நடக்கவே நிறையை சக்தி வேண்டும் என பெண்களே பெருமூச்சு வாங்கும் அளவுக்கு மிரட்டலாக தயாரிக்கப்பட்டுள்ளது பாகுபலி கொலுசு.

வெள்ளி ஆபரணங்களை அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது தாத்பரியம். மேலும் கால்விரல், கைவிரல் நகங்களில் மெட்டி மற்றும் மோதிரம் அணிவதால், அப்பகுதியில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்றும் நம்பப்படுகிறது. எல்லாவற்றிலும் டிரெண்ட் மாறுவது போல மெட்டியிலும் பிரம்மாண்ட மெட்டிகள் வியக்க வைக்கிறது.

மெட்டியில் பிளவர் டிசைன், அதன் விளிம்புகளில் ஸ்டோன் ஒர்க், எனாமல் பெயின்டிங் மற்றும் இசைக்கும் சலங்கைகளும் பொருத்தப்பட்டுள்ளது. மெட்டி அணிந்தாலே போதும் கொலுசு அணிந்தது போல உங்கள் இருப்பை இசையால் உணர்த்தும். இன்றைய பெண்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல, வெள்ளி நகைகளிலும் பிரம்மாண்ட படைப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
kTUXwGN

Related posts

mehndi design of front hand

nathan

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

பெண்கள் விரும்பும் தங்க ஆபரணங்கள் இவைதானாம்!

sangika

ஆடைகளின் அரசி சேலை

nathan

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்

nathan

கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

nathan