4254293 8
Other News

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் ஜோடி

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனை சுற்றி விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது. ஆனால், இது பற்றி ஐஸ்வர்யா ராயோ, அமிதாப் குடும்பத்தினரோ வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்த தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக கலந்து கொண்டதும், அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடன் தனியாக வந்திருந்ததும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இவர்களது விவாகரத்து செய்திகள் குறித்து விவாதத்தை கிளப்பியது.

4254293 8

இந்நிலையில், விவாகரத்து பற்றிய பதிவு ஒன்றை சமூகவலைதளங்களில் லைக் செய்திருக்கிறார் அபிஷேக் பச்சன். அந்த பதிவில், ‘காதலிப்பவர்களுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது வலி இருக்கதான் செய்யும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை லைக் செய்து மீண்டும் விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் அபிஷேக் பச்சன். இதனால், இருவரும் பிரிய உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

Related posts

தளபதி விஜய் மகனுடன் நடிகை அதிதி சங்கர்

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

nathan

தமிழும் சரஸ்வதியும் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

ரோவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கியது

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்

nathan

நாக சைதன்யாவுடன் காதலா?

nathan

சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்..

nathan