தற்போது க்ரீன் டீ மக்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான ஓர் பானமாக உள்ளது. க்ரீன் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள். அதற்காக தினமும் காலையில் க்ரீன் டீ குடிப்போரின் எண்ணிக்கையும் அதிகம். அப்படி குடிப்பதற்கு க்ரீன் டீ போடும் போது, அதன் பேக்கை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் க்ரீன் டீ பேக்கைக் கொண்டு அழகைப் பராமரிக்கலாம்.
ஆம், க்ரீன் டீயின் பேக்கில் சருமத்திற்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது க்ரீன் டீயின் பேக்குகளை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
கண்களுக்கு நல்லது
க்ரீன் டீ போட்ட பின் அந்த பேக்குகளை குளிர வைத்து, அதனை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், அதில் உள்ள டேனின் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, கருவளையங்களையும் நீக்கும்.
ஸ்கரப்
க்ரீன் டீ பேக்குகளில் உள்ளதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் சர்க்கரை மற்றும் நீர் கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பு தந்து, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
தேன் மற்றும் பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் க்ரீன் டீயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், சுருக்கமின்றியும், பொலிவோடும் இருக்கும்.
க்ரீன் டீ பேக் ஸ்கரப்
காலையில் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால், க்ரீன் டீயின் பேக்கில் உள்ள நீரை பிழிந்துவிட்டு, அந்த பேக்கைக் கொண்டு முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.
முடிக்கு…
ஆம், க்ரீன் டீயைக் கொண்டு முடியை அலசினால், முடி நன்கு கருப்பாகவும், பட்டுப்போன்றும் மின்னும். அதற்கு இரவில் படுக்கும் போது க்ரீன் டீ பேக்குகளை கொதிக்கும் நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முடியை நீரில் அலசி, பின் க்ரீன் டீ நீரை தலையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.