29.3 C
Chennai
Friday, Mar 20, 2026
Other News

கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் விஜயகாந்த் சமாதிக்கு சென்றேன். அங்கிருந்து அவர் வீட்டுக்குச் சென்றோம். பேசும் போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை சுட்டிக் காட்டி “அண்ணன் ஹீரோவாக நடிக்கிறார்” என்றார். அவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விஜயகாந்தின் சகோதரி என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகள் என் மனதில் ஒரு மாதிரியை உருவாக்கியது. விஜயகாந்த் பல நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். பல கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்.

அதனால் எனக்கு இவ்வளவு உதவி செய்தவரின் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சண்முக பாண்டியன் படம் வெளியாகும் போது படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டியது அவசியம். அதை பிரபலப்படுத்த வேண்டும். அதைச் செய்ய நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுமட்டுமின்றி, படக்குழு ஒப்புக்கொண்டால், சண்டைக்காட்சியாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி படத்தில் ஒரு கேமியோவில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

சண்முக பாண்டியன் மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நானும் சேர்ந்து நடிச்சாலும் அவருடன்தான் நடிப்பேன். திரு.விஜய பிரபாகரன் அரசியலுக்கு வர வாழ்த்துகள்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

Related posts

இன்ஜினியரிங் படித்த ஒருவர் என்ஜினீயர் மீன், கறி விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம்-

nathan

சிம்மத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்

nathan

அரசியலுக்காக எம்.ஜி.ஆரை மிஞ்சி தளபதி

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களுக்கும் பண மழை பெய்யும்

nathan

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

nathan

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி

nathan

பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்? மாதவிடாய் தவறியதால் கர்ப்ப பரிசோதனை

nathan

கணவனை கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெண் ராசி

nathan