Tu5V7We
ஃபேஷன்

டிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம் புதிதாக உள்ளன. அவற்றை வேறு ஏதேனும் உபயோகத்துக்கு மாற்றிக் கொள்ள முடியுமா?

ஃபேஷன் டிசைனர் ஃபரா

உங்களிடமுள்ள டிசைனர் சேலைகளை சல்வார் செட்டாக, லாச்சா செட்டாக, லெஹங்கா சோளிகளாக, அழகான கவுன்களாக… இன்னும் எப்படி வேண்டுமானாலும் தைத்துக் கொள்ளலாம். இவற்றை வைத்து வீடுகளுக்கு திரைச்சீலைகள், குஷன் கவர்கள்கூட தைக்கலாம். கொஞ்சம் ஆடம்பரமாகவும் தெரியும்.

பிராகேட் புடவைகளை திவான் தலையணைகளை டிசைன் செய்யப் பயன்படுத்தலாம். கொஞ்சம் கிழிந்தோ, ஓரங்கள் பிய்ந்தோ காணப்படுகிற சேலைகளை டிசைனர் துப்பட்டாக்களாக மாற்றிக் கொள்ளலாம். தனியே அது போன்ற துப்பட்டாக்களை வாங்க நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்குப் பதில் செலவே இல்லாமல் இரண்டு, மூன்று துப்பட்டா கூட டிசைன் செய்து கொள்ளலாம்.

Tu5V7We

Related posts

புதிய புடவை கட்டும் பெசன்கள்!….

sangika

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

nathan

முகங்களிற்கு ஏற்ற பொட்டு

nathan

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

nathan

மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை கட்டாயம் தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்….

sangika

உங்களுக்கேற்ற ஆடையை தேர்வு செய்வது எப்படி?

nathan

ஸ்லீவ்லெஸ் உடை… அடர் நிற லிப்ஸ்டிக் பெண்கள் – சமூக மதிப்பீடு என்ன?

nathan

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

nathan