பிரித்தானியாவின் நொட்டிங்ஹாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை மாணவியின் குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நோட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழக ஓஷத ஜயசுந்தர (31) புதன்கிழமை வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஜோசுவா கிரிகோரி, 27, கைது செய்யப்பட்டு, ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர் தங்களது இழப்புக்கு நீதி கோரி வருகின்றனர். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர் ஓஷத ஜயசுந்தர விபத்தில் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொள்கின்றோம். இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வை அறிந்ததும் எங்கள் இதயம் சோகத்தில் மூழ்கியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவிய நொட்டிங்ஹாம்ஷயர் பொலிஸ் ஊழியர்கள், நொட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழக ஊழியர்கள், பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
திரு ஓஷதாவின் நினைவைப் போற்றும் வகையில் நாமும் இந்த விடயத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
சம்பவத்தன்று, 27 வயதான ஜோசுவா கிரிகோரி பொலிஸ் துரத்தலின் போது வேகமாகச் சென்றபோது, அவரது கார் பாதசாரி ஓஷதா ஜெயசுந்தர மீது மோதியது. உள்ளூர் நேரப்படி சுமார் 3:20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.