தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?
சரும பராமரிப்பு

தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?

காலங்காலமாக தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் தேங்காய் எண்ணெயை, சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான்.#tamil beauty tips

தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.

இக்காரணங்களால் தான் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்லது என்று சொல்கிறார்கள். சரி, இப்போது தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

மேக்கப் ரிமூவர்

இரவில் தூங்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் முழுவதும் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

மாய்ஸ்சுரைசர்

உங்களுக்கு சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படுமாயின், தேங்காய் எண்ணெயை கைகளுக்கு தடவலாம். மேலும் தேங்காய் எண்ணெயை கைகளுக்குத் தடவினால், நீண்ட நேரம் சருமத்தில் ஈரப்பசை தங்கியிருக்கும்.

சரும பிரச்சனைகள் தடுக்கப்படும்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஷேவிங்

கால்களில் உள்ள முடியை நீக்கும் முன், தேங்காய் எண்ணெய் சருமத்தில் தடவிக் கொண்டு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு, முடியும் எளிதில் வெளிவரும்.

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பினால் அவஸ்தைப்பட்டால், லிப் பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் உதடு வெடிப்பு தடுக்கப்படுவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.

முதுமையைத் தடுக்கும்

தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன…?

nathan

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

nathan

இனி முதுகை மறைக்க வேண்டாம்

nathan

மங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் ?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு! கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan