26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
ijdPbzA
ஃபேஷன்

ஜீன்சுக்கு ஏற்ற டாப்ஸ்

புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்தகாலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்தது தான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம் தான். தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டிசர்ட்டிற்கு மாறினர். எங்கு பார்த்தாலும் சுடிதார்கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளிக்கிறது. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருக்கிறது.

தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒருசிலரால் விரும்பி அனியப்படும் ஆடையாக மாறியது. பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியை தவிர்த்து விட்டு, சுடிதார் முறையை அமல்படுத்திவிட்டனர். தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே மறைந்து விட்டது. சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன.

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர் முழுக்கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அது போன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம். அல்லது சட்டையை விடக்கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன.

அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன. எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இது போன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒருபேஷன் ஆகிவிட்டது. கை நீளம், கைக்குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..

ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம். உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.ijdPbzA

Related posts

அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்

nathan

கலர் கலராய் கவரும் காலணி

nathan

காட்டன் புடவை வகைகள் – cotton sarees

nathan

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

nathan

பெண்ணுக்கு ஏற்ற உடை சேலையா? சுடிதாரா?

nathan

பெண்களை கவரும் கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

ஜொலி ஜொலிக்கும் கோல்டு எம்பிராய்டரி சுடிதார்

nathan