என்னென்ன தேவை?
மைதா – 2 கப்,
சர்க்கரை – 2 டீஸ்பூன்,
உப்பு – 1 டீஸ்பூன்,
பால் – 1/2 கப்,
தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதா, உப்பு, சர்க்கரை கலந்து பால் சேர்த்து மாவை பிசையவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் வைக்கவும். மாவை உருட்டிக் கொள்ளவும். கையில் எண்ணெயை தொட்டுக் கொண்டு தூய்மையான இடத்தில் உருட்டிய மாவை பரப்பி சேலை ப்ளீட்ஸ் வைப்பது போல மடித்து அதை தட்டையாக செய்து தோசைக் கல்லை சூடாக்கி புரோட்டாவை சுட்டு எடுக்கவும். பார்டர் புரோட்டா ரெடி.