திரையுலகில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை விசித்ரா பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் 7 வாழ்க்கையை உலுக்கிய ஒரு சம்பவத்தை செய்ய உத்தரவிடப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் பல கசப்பான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வரிசையில் பேசிய விசித்ரா, “2001-ல் இருந்து நான் சினிமாத்துறையில் இருந்து காணாமல் போனேன். யாருக்கும் அதற்கான காரணம் தெரியாது. ஒரு டாப் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்பான பார்ட்டியில் என்னை சந்தித்த அந்த நடிகருக்கு என் பெயர் கூட அவருக்கு தெரியாது. நீங்க இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டு பிறகு
“தயவுசெய்து என் அறைக்கு வாருங்கள்” என்று வெளிப்படையாக அழைத்தார். அவர்கள் குடித்துவிட்டு வெளியே வந்து என் கதவை பலமாகத் தட்டினார்கள். இன்னும் அந்த சத்தம் கேட்கிறது. ஒரு நாள் காட்டில் படப்பிடிப்பின் போது தீவிரவாதிகள் மற்றும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் கலவர காட்சி படமாக்கப்பட்டது.
பிறகு நான் ஆக்ஷன் சொன்னபோது யாரோ தவறான இடத்தில் என்னைத் தொட்டார்கள். பின்னர் ஷாட் மீண்டும் எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே செயலைச் செய்தார். மூன்றாவது டேக்கை எடுத்தபோது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்தோம். உடனே அவன் கையைப் பிடித்து இழுத்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்றேன்.
அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அரைந்துவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் தான் சினிமாவை விட்டே விலகி இருந்தேன். அந்த ரணத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அதற்கு தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.