32.2 C
Chennai
Monday, May 20, 2024
6913c1d2 9608 4a05 869b ee1b9f0306f3 S secvpf
கால்கள் பராமரிப்பு

கருப்பான கால்களை அழகாக்க இத டிரை பண்ணுங்க

வெயிலின் தாக்கத்தால் முகம், கைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படுவது கால்கள். அதுவும், போதிய பராமரிப்பு இல்லாவிட்டால் கால்களில் பித்தவெடிப்பு மற்றும் கருமை நிறத்தில் மாறிவிடும். அதற்கு, அழகு நிலையங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக வீட்டிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

* எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* பாதங்களுக்கான ஸ்கரப் செய்வதற்கு, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் நிரம்பியுள்ள வாளியில் சேர்த்து கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், கால்களில் உள்ள கருமை மறைந்து, கால்கள் பொலிவோடு இருக்கும்.

* ஷாம்பு கலவையில் கால்களை ஊற வைத்து கழுவிய பின்னர், மில்க் க்ரீம் கொண்டு கால்களை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைந்துவிடும்.
6913c1d2 9608 4a05 869b ee1b9f0306f3 S secvpf

Related posts

பட்டு போன்ற பாதத்திற்கு வீட்டில் செய்யலாம் மசாஜ்

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika

பாத வெடிப்பில் இருந்து விடுபட…

nathan

உங்களுக்கு தெரியுமா கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்

nathan

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

வீட்டில் தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

nathan