29.3 C
Chennai
Tuesday, Nov 19, 2024
1148617
Other News

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

2022-23ஆம் ஆண்டில் அதிக நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியலை ஹுருன் அமைப்பு வெளியிட்டுள்ளது. HCL இணை நிறுவனர் ஷிவ் நாடார் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஷிவ் நாடார் 2022-23 நிதி ஆண்டில் ரூ.2,042 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5.6 கோடி அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். 2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவர் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,770 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். மூன்றாம் இடத்தில் முகேஷ் அம்பானி (ரூ.376 கோடி), நான்காம் இடத்தில் குமார மங்களம் பிர்லா (ரூ.287 கோடி), ஐந்தாவது இடத்தில் கவுதம் அதானி (ரூ.285 கோடி) உள்ளனர்.

இந்த பட்டியலில் பஜாஜ் குடும்பம் ரூ.264 கோடி நன்கொடையுடன் 6வது இடத்தில் உள்ளது.

வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் (ரூ. 241 கோடி ) 7வது இடத்திலும், சைரஸ் பூனவல்லா மற்றும் ஆதார் பூனவல்லா (ரூ. 179 கோடி ) 8வது இடத்திலும், நந்தன் நிலகேனி, நிதின் காமத் மற்றும் பலர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரோகினி நிலகேனி, அனு ஆகா, ரீனா காந்திதிவாலி உள்ளிட்ட ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ரோகினி நிலகேனி 170 கோடி ரூபா நன்கொடை வழங்கினார்.

Related posts

மாமன்னன் படத்தின் MAKING புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

nathan

அந்த விஷயத்தில் பயம் இல்ல.. நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு

nathan

18-கேரட் தங்கக் கழிப்பறைத் தொட்டித் திருட்டு

nathan

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்…நேர்ந்த விபரீதம்!!

nathan

மகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை

nathan

கமல்ஹாசனை பிரிந்ததில் எனக்கு வருத்தமில்லை :முன்னாள் மனைவி

nathan

சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய் ?வீடியோ

nathan

ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்!உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது

nathan