31.9 C
Chennai
Thursday, May 29, 2025
4202 sd Main
தலைமுடி சிகிச்சை

ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா?

அடிக்கடி கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்தால்தான் நன்கு வளரும் என்பது உண்மையா?

ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவித் ஹபீப்

கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் எந்த விதத்திலும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை.

எந்த எண்ணெயும் கூந்தலை வளரச் செய்யாது. எண்ணெய் தடவுவதன் மூலம் மண்டைப் பகுதியில் ஒருவித வழுவழுப்புத் தன்மை ஏற்படும். சிறிது நேரத்துக்கு கூந்தலை மென்மையாக வைக்கும். அவ்வளவுதான்.ஆயில் மசாஜ் செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸ்டாக உணர்வீர்கள். அந்த எண்ணெய் உங்கள் மண்டைப் பகுதிக்குள் இறங்கி வேலை செய்வதாக நினைப்பீர்கள். உண்மையில் எண்ணெய் என்பது மண்டைக்குள் இறங்காது. அது ஒருவித வெளிப்பூச்சு. அவ்வளவே!

ஆயில் மசாஜ் செய்ததும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும். அதனால் மசாஜ் செய்த எண்ணெய் தவிர, மண்டைப் பகுதியில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையும் சேர்ந்து போவதால், கூந்தல் இன்னும் அதிகம் வறண்டுதான் போகும். கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெய், ஷாம்பு போன்ற வெளிப்புற சிகிச்சைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளே போகிற ஊட்டத்தைப் பொறுத்தது.
4202 sd Main

Related posts

அட்டகாச ‘ஹேர் மாஸ்க்குகள் கூந்தலை பொலிவடைய…

nathan

உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா??? இத பண்ணுங்க முதல்ல

nathan

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா?

nathan

தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

nathan

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

nathan

நரை முடி பிரச்சினையால் தொடர்ந்து அவதியா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்!

nathan

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan