35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
1 samai cutlet 1660658522
சிற்றுண்டி வகைகள்

சாமை கட்லெட்

தேவையான பொருட்கள்:

* சாமை – 2 கப் (வேக வைத்தது)

* எண்ணெய் – 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* சிறிய கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)1 samai cutlet 1660658522

செய்முறை:

* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து வேக வைத்துள்ள சாமையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

Samai Cutlet Recipe In Tamil
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சாமை கட்லெட் தயார்.

Related posts

சுவையான சத்தான கீரை கட்லெட்

nathan

பட்டாணி பூரி

nathan

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

பாட்டி

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா

nathan

சுவையான பிஸ்கீமியா ஸ்நாக்ஸ்- செய்வது எப்படி?

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

இலந்தை பழ வடாகம்

nathan