31.9 C
Chennai
Friday, Jul 26, 2024
sru
சரும பராமரிப்பு

இயற்கை வழிகளில் உங்கள் சருமத்தை வெள்ளையாக்க சில எளிய டிப்ஸ்.

ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அதற்காக சருமம், தலைமுடி போன்றவற்றிற்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். அதிலும் வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகத்தால், பலரும் தங்களின் சருமத்தையும் வெள்ளையாக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது க்ரீம்கள் நல்லதல்ல என்பதை உணர்ந்த மக்கள், இயற்கை வழிகளை நாடுகின்றனர். நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். சரி, இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் அந்த எளிய பாட்டி வைத்தியங்களைப் பார்ப்போமா.!

ஆப்ரிக்காட் பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சரும நிறம் அதிகரிக்கும்.

2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க இந்த ஃபேஸ் பேக்கைப் போடலாம். அது சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

தினமும் மாட்டுப் பால் கொண்டு முகத்தை பலமுறை துடைத்து எடுத்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும், சருமத்தின் நிறமும் மேம்பட்டும் காணப்படும்.
sru

Related posts

சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?

nathan

கழுத்து கருமை நிறம் மறைய

nathan

ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan

சரும பிரச்சனைகளைத் தடுக்க வெந்தயத்தைப் பயன்படுத்துவது எப்படி?சூப்பரா பலன் தரும்!!

nathan

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

அழகழகாய்… அசத்தல் டிப்ஸ்!!அழகு குறிப்புகள்!!!

nathan

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!

nathan

பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan