36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

நான் கொஞ்சம் கறுப்பு. அதனாலேயே வரன்கள் தள்ளிப் போகின்றன. மாநிறத் தோற்றம் வர என்ன செய்ய வேண்டும்?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா மோகன்…

நிறம் பற்றிய கவலை வேண்டவே வேண்டாம். கறுப்பும் அழகுதான் கண்மணி! பார்லரில் க்ரீம் ப்ளீச் சிகிச்சையை மாதம் ஒரு முறை செய்தாலே போதும்… நிறம் மாறும். இப்போது ‘பயோ வேக்ஸ்’ என்ற சிகிச்சையும் உள்ளது. சருமத்தை வேக்ஸிங் மூலம் சரி செய்து நல்ல நிறத்தைப் பெறலாம்.

திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பு ‘ஸ்கின் லைட்னிங் ஃபேஷியல்’ செய்தால் பலன் கிடைக்கும். ப்ளீச் செய்த பிறகு வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு ப்ளீச் செய்தால் தோல் வறண்டு போகும். அவர்கள் இரவு தூங்கப் போவதற்கு முன்பு ‘மாய்ஸ்சரைஸர் க்ரீம்’ தடவிக்கொள்வது நல்லது.

வீட்டிலேயே சில சிகிச்சைகளையும் செய்யலாம். ஒரு ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாகக் கலந்து, அதை முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Related posts

உடல் வனப்பாக..! டிப்ஸ்! அழகு குறிப்புகள்!!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

உங்க கழுத்து கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!

nathan

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

உச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்…

nathan

கைகளில் சுருக்கமா?சரி செய்ய இதோ அசத்தலான டிப்ஸ்

nathan

வேனிட்டி பாக்ஸ் வாக்சிங்tamil beauty tips

nathan

beauty secrets from grandma – பாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள்

nathan