28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
orange chicken
அசைவ வகைகள்

சுவையான ஆரஞ்சு சிக்கன்

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ

* முட்டை – 1

* உப்பு – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* சோள மாவு – 2+1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப்

* வரமிளகாய் – 4 (விதைகள் நீக்கி, பொடியாக நறுக்கியது)

சாஸ் மிக்ஸ்…

* ஆரஞ்சு ஜூஸ் – 1 1/2 கப்

* துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்

* துருவிய பூண்டு – 1 பல்

* நாட்டுசர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* சில்லி கார்லிக் சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சிக்கனில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பிசைய வேண்டும்.

* பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் சாஸ் மிக்ஸிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சாஸ் மிக்ஸரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, பொடியாக நறுக்கிய வரமிளகாயைத் தூவி, சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ஆரஞ்சு சிக்கன் தயார்.

Related posts

சுவையான மட்டன் குடல் குழம்பு

nathan

காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan

சுவையான… வாத்துக்கறி குழம்பு

nathan

முட்டை அவியல்

nathan

வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு

nathan

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan