how to make Fenugreek spiced rice SECVPF 1
சைவம்

வெந்தய சாதம்

தேவையான பொருட்கள் :

சாதம் – 1 கப்
வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை

தாளிக்க :

கடுகு – கால் டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

• அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

• வெந்தயத்தை முளைக்கட்டி, காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

• வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளித்த பின் அதில் சாதம், அரைத்த பொடி, வெந்தயப் பொடி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறுங்கள்.

• இந்த சாதத்தை சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

• மலக்சிக்கல், நீரிழிவு, வயிற்றுப் புண், வாய் துர்நாற்றம் உட்பட பல பிரச்சினைகளை இந்த வெந்தய சாதம் மட்டுப்படுத்தும். how to make Fenugreek spiced rice SECVPF 1

Related posts

தக்காளி – புதினா புலாவ்

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

பரோட்டா!

nathan

தந்தூரி மஷ்ரூம்

nathan

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan

சப்ஜி பிரியாணி

nathan

கட்டி காளான்

nathan

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan

உருளை வறுவல்

nathan