இன்றைய தலைமுறையினர் நரை முடியால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அதிலும் நரை முடியால் 20 வயதிலேயே முதுமை தோற்றத்தைப் பெறுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அதில் ஆரோக்கியமற்ற டயட்டை பின்பற்றுவது, பரம்பரை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சிலருக்கு தைராய்டு பிரச்சனை மற்றும் வைட்டமின் குறைபாட்டினால் கூட நரை முடி வரும்.
ஆனால் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து மனதை ரிலாக்ஸாக வைத்து, ஒருசில ஹேர் பேக்குகளை முடிக்கு வாரம் ஒருமுறை போட்டு வந்தால், நரை முடியை மறைக்கலாம். சரி, இப்போது நரை முடியை போக்க உதவும் ஹேர் பேக்குகளைப் பார்ப்போமா!!!
செம்பருத்தி தயிர் பேக் ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/4 கப் செம்பருத்தி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து, தலையை நீரில் ஒருமுறை அலசி, பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் நரை முடி மறையும்.
கடுகு எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளித்து இறக்கி குளிர வைத்து, ஈரமான தலையில் தடவி 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், நரை முடி மறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் அருகம்புல் பொடி அருகம்புல் பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஈரமான ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
உருளைக்கிழங்கு ஜூஸ் பேக் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
மில்க் க்ரீம் மற்றும் முட்டை பேக் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் மில்க் மற்றும் 2 முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலந்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
வேப்பிலை பேக் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, கோடையில் குளித்து வந்தால், உடல் வெப்பம் குறைவதோடு, நரை முடியும் மறையும்.
ஹென்னா மற்றும் தயிர் பேக் ஒரு பௌலில் 1 கப் ஹென்னா பொடியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
கற்றாழை ஜெல் மற்றும் சுரைக்காய் பேக் சுரைக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் அலசவும். இப்படி செய்தாலும் நரை முடி மறையும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பேக் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் மயிர்கால்களில் படும் படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.