30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

காராமணி சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒன்றரை கப் (உதிரியாக வடித்தது),
காராமணி – அரை கப்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

• அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கயிதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

• வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும்.

• பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்

Related posts

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

செட்டிநாடு பக்கோடா குழம்பு

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

வாங்கி பாத்

nathan

வெண்டை மொச்சை மண்டி

nathan

சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

ருசியான… அவரைக்காய் சாம்பார்

nathan