25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
c6ac0c87 cc16 44d5 a602 14e45c6e27ed S secvpf
அசைவ வகைகள்

சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

தேவையான பொருட்கள்:

சிக்கன் லிவர் – 200 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறிய பின் தக்காளியைப் போட்டு, நன்கு மசியும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கன் லிவரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடம் லிவர் நன்கு வேகும் வரை வைக்க வேண்டும்.

* இறுதியில் மூடியை திறந்து, கெட்டியாக வந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை ரெடி!!!c6ac0c87 cc16 44d5 a602 14e45c6e27ed S secvpf

Related posts

நாசிக்கோரி

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan

ஸ்பைசி கோங்குரா (புளிச்சக்கீரை) சிக்கன் செய்ய தெரிந்து கொள்வோம்…..

nathan

காரசாரமான… குட்டநாடன் மீன் குழம்பு

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

பாத்தோடு கறி

nathan

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

nathan

சில்லி முட்டை

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika