29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
p014a
முகப் பராமரிப்பு

முகப்பொலிவுக்கு 5 வழிகள்!

ஆரஞ்சு பழம்

வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிட்டு வந்தாலே சருமம் பொலிவடையும். இதில் இருக்கும் கொலான்ஜங்கள் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். செல்களின் அமைப்பை பாதுகாக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். இளமையை தக்க வைக்கும்.

பப்பாளி

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. பப்பாளியில் இருக்கும் பாம்பெயின் என்கிற என்சைம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். சரும நோய்கள் வருவதை தடுக்கும். பப்பாளி சாறை முகத்தில் தடவி வந்தால் தக தக என மின்னும்.

வாழைப்பழம்

எளிதில் கிடைக்கக் கூடிய இந்த பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், நிறைந்திருக்கிறது. மாதவிடாய் சமயத்தில் வரும் தசை வலி, வெடிப்புகளை வாழைப்பழம் தடுக்கும். இந்தப் பழத்தை மசித்து வாரம் ஒருமுறை ஃபேஷியல் செய்தால் சுருக்கங்கள் நீங்கும்.

எலுமிச்சைப் பழம்

இதன் சாற்றை முகத்தில் பூசி மசாஜ் செய்தால், இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள கருந்திட்டுகளை நீக்கும். அழுக்குகளை வெளியேற்றும். எலுமிச்சையுடன் தேன் சேர்த்து மசாஜ் செய்தால் தோல் மென்மையாக, மிருதுவாக மாறும்.

வெள்ளரி

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா நிறைந்துள்ளது. வெள்ளரி துண்டுகளை வெட்டி, கண் மேல் இருபது நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு வெள்ளைத் துணியை நீரில் நனைத்து முகத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்தால் கண்ணை சுற்றியுள்ள கருவளையம் மறையும். வெள்ளரியை ஜூஸ் செய்து சாப்பிட்டால் தோற்றமே இளமையாகும்.
p014a

Related posts

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

nathan

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

முகம் பளபளப்பாக இருக்க சிறந்த டிப்ஸ்!….

sangika

இதோ சில டிப்ஸ்… ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா?

nathan

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்..!

nathan

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika

எண்ணெய் வழியும் சருமமா?

nathan