30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
27
முகப் பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ்: பவுடர்

பிறந்த குழந்தைக்குக் கூட பவுடர் அடித்து அழகு பார்த்தால்தான் நம்மில் பலருக்கும் நிம்மதி. குளிக்கிறோமா இல்லையா, முகம் கழுவுகிறோமா இல்லையா என்றெல்லாம் கூடக் கவலைப்படாதவர்களுக்கு பவுடர் அடிக்காமல் வெளியே கிளம்புவதென்றால், ஏதோ குறைகிற மாதிரியே உணர்வார்கள். பவுடர் என்பது பளிச் தோற்றத்தின் அடையாளம் என்று காலம் காலமாக மக்கள் மனங்களில் ஊறிப் போன விஷயம். மேக்கப்பிலும் மிக முக்கிய இடம் வகிப்பது பவுடர்.

பவுடர் என்கிற பெயரில் விதம் விதமான மணங்களில் நாம் உபயோகிக்கிற எல்லாம் சரியானவைதானா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தினசரி உபயோகத்துக்கு ஒன்று… மேக்கப்புக்கு ஒன்று… சருமப் பிரச்னைகளுக்கு ஒன்று என பவுடர்களில் பலவிதம் உண்டு” என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. பவுடர்களை பற்றிய ஏ டு இஸட் தகவல்களையும் பகிர்கிறார். பவுடர் என்று சொன்னதுமே குளித்து முடித்ததும் உபயோகிக்கிற பவுடர்தான் நினைவுக்கு வரும். அது டால்க். டால்கம், டால்க் என இரண்டு வகைகள் உள்ளன.

டால்கம் என்பது டால்க்கை நன்கு சலித்து கலர் கலந்தோ அல்லது கலக்காமல் அப்படியே வெள்ளையாகவோ வைத்திருப்பார்கள். டால்க் என்பது சற்றே கொரகொரப்பான பவுடர். உதாரணத்துக்கு வெயில் காலங்களில் வியர்க்குரு போக்க உபயோகிக்கிறோமே, அதுதான் டால்க். அதன் துகள்கள் சற்றே பெரிதாக இருக்கும். அதை நாம் உடம்புக்கு உபயோகிப்பதால் ரொம்பவும் மென்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சாதாரணமாக நாம் குளித்துவிட்டு வந்ததும் ஈரம் இல்லாமல் இருக்கவும், ஆன்ட்டி பாக்டீரியல் விளைவுக்காகவும், வாசனைக்காகவும், வியர்வையையும், வியர்க்குரு மற்றும் சின்னக் கட்டிகளைத்தடுக்கவும் உபயோகிப்பதுதான் டால்க். வெயில் காலங்களில் இதற்கு நிறைய விளம்பரங்கள் வருவதைப் பார்க்கலாம்.

குளித்து முடித்ததும் உடம்பை ஈரம் போகத் துடைத்துவிட்டு டால்க் போட்டு, பிறகு உடை அணிகிற போது நீண்ட நேரம் புத்துணர்வாக உணர்வோம். ஈரமோ, வியர்வைக் கசகசப்போ இருக்காது. மறுபடி வீட்டுக்கு வந்ததும் அல்லது இரவு தூங்கச் செல்வதற்கு முன் குளித்துவிட வேண்டும். ரொம்ப நேரம் டால்க் நம் உடலில் இருந்தால் சருமத்துவாரங்கள் அடைபடும். அதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை எடுத்துவிட்டு, உடலை சுத்தமாக்கி, துடைத்துக் கொண்டு, தேவைப்பட்டால் மறுபடியும் போட்டுக் கொள்ளலாம்.

சிலர் இரவு படுக்கப் போகும்போது டால்க் போட்டுக் கொள்வதன் மூலம் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக உணர்வார்கள். ஆனால், எப்போதுமே டால்க் உடன் இருக்க வேண்டாம். அரை நாள் டால்க் உடன் இருந்தால், இன்னொரு அரை நாள் அது இல்லாமல் இருப்பதே நல்லது.முகத்துக்கான பவுடரில் 2 வகைகள் உள்ளன. ஒன்று லூஸ் பவுடர். இன்னொன்று ப்ரஸ்டு பவுடர். பவுடர் உபயோகிப்பதால் முகத்தில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை மறைக்க முடியும். சருமம் மிகவும் மென்மையாகவும், எண்ணெய் பசை இல்லாமலும் இருக்கும்.

வெளிப்புற, சுற்றுப்புற மாசுகளில் இருந்து நம் சருமத்தைக் காக்கும் ஒரு கவசமாகவும் பவுடர் வேலை செய்யும். பெரும்பாலும் பவுடர்களின் பிரதான சேர்க்கை என்பது டால்க். சில நேரங்களில் மைக்கா பேஸ்டு பவுடர்களையும் உபயோகிக்கிறார்கள். டால்க் பேஸ்டு பவுடர் என்பது வெள்ளை நிறத்தில் நாமெல்லாம் வாங்கி உடம்புக்கு உபயோகிப்பது. அதன் துகள்கள் சற்றே பெரிதாக இருப்பதால், பவுடர் போட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும். இப்போது பிரபலமாகி வரும் மினரல் மேக்கப்பில் மைக்கா பேஸ்டு பவுடர் உபயோகிக்கிறோம். அது போட்டதே தெரியாது. அவரவர் சரும நிறத்திலேயே கிடைக்கிறது.

ஃபவுண்டேஷனுடன் ஒட்டிக் கொண்டு, பவுடரானது நமது சருமத்துக்கு சீரான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும், திட்டுத்திட்டான படிவங்களை எடுக்கவும் உபயோகமாகிறது. பவுடர் இல்லாமல் மேக்கப் பண்ணவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் பவுடர்தான் மேக்கப்பை பளிச்சென எடுத்துக் காட்டும். உதாரணத்துக்கு ஐ ஷேடோ போடுவதென்றால்கூட ஒரு கோட் பவுடர் இருந்தால் இன்னும் பளிச்செனத் தெரியும். கன்னங் களை எடுப்பாக, அழகாகக் காட்ட உபயோகிக்கிற பிளஷர் கூட பவுடருக்கு மேல்தான் போடப்படுகிறது. பவுடர் என்பது ஓர் அடிப்படை.லூஸ் பவுடர் பற்றிப் பார்ப்போம்.

இதில் ஆயில் அல்லது கம் கொஞ்சம் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் பலவித ஷேடுகள் உள்ளன. முன்பெல்லாம் ரோஸ் பவுடர் எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது ரோஸ் மட்டுமில்லாமல் எல்லா கலர்களிலும் கிடைக்கிறது. லைலக் கலர் என ஒன்று வருகிறது. செயற்கை வெளிச்சத்தில் பார்க்கும் போது பிரமாதமாக இருக்கும். இப்போது எல்லோ பவுடர் என்பது பலராலும் விரும்பப்படுகிறது. வெயிலில் அலைந்து கருத்துப் போன சருமத்துக்கு இதை உபயோகிக்கும் போது, மிகவும் பளிச்செனத் தெரிவார்கள். சிலரின் சருமத்தில் பருக்களும், சிவப்பு நிறத் திட்டுகளும் இருக்கும்.

அவர்களுக்கு லேசான பச்சை கலந்த பவுடர் உபயோகிக்கலாம். இதெல்லாம் அழகுக்கலை நிபுணர்களின் உபயோகத்துக்கு மட்டுமே கிடைக்கும். மிகச் சுலபமாகக் கிடைக்கக்கூடியது என்றால் இரிடீஸன்ட். அதில் ஒருவகையான பளபள ப்பு இருக்கும். மாலை நேரத்து மேக்கப்புக்கு உபயோகிக்க ஏற்றது. எல்லா பவுடர்களிலுமே டைட்டேனியம் டை ஆக்சைடு இருக்கும். இது ஒருவிதமான
வெள்ளை நிற பிக்மென்ட் கொண்டது. கருப்பான சருமத்தைக்கூட சற்றே பிரகாசமாகக் காட்ட இந்த மாதிரி பவுடர் உபயோகிக்கலாம்.இப்போது அல்ட்ரா ஃபவுண்டேஷன் பவுடர் என வந்திருக்கிறது. இதை கேமரா பேஸ்டு பவுடர் என்றும் சொல்லலாம். ஹை டெஃபினிஷன் மேக்கப்புக்கு உபயோகிக்கக்கூடியது. மிக நுணுக்கமான சருமக் குறைபாடுகளைக்கூட இதில் மறைக்கச் செய்யலாம்.

அடுத்தது ப்ரஸ்டு பவுடர். இதில் கம் இருக்கும். இதைத்தான் பெரும்பாலும் மேக்கப்புக்கு உபயோகிக்கிறோம். காம்பேக்ட் பவுடர் என்றும் இதைக் குறிப்பிடலாம். வேலைக்குச் செல்கிற பெண்கள் தினமும் இதை உபயோகிப்பதன் மூலம் ஃப்ரெஷ்ஷாகவும் பளிச்சென்றும் காட்சியளிக்கலாம்…” காம்பேக்ட் பவுடரை தேர்வு செய்கிற முறை, பேபி பவுடர் பாதுகாப்பானதா, அதென்ன மெடிக்கேட்டட் பவுடர்? பவுடர் பற்றிய மேலும் பல தகவல்கள் அடுத்த இதழிலும் தொடரும்.27

Related posts

பட்டர் ஃப்ரூட் ரகசியம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

உதடுகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

முக வசீகரம் பெற

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பிரகாசமாக்கும் ஃபேஸ் பேக்குகள்!

nathan