25.1 C
Chennai
Thursday, Dec 4, 2025
download 91
அசைவ வகைகள்

முந்திரி சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 15

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தயிர் – 1 டீஸ்பூன்

பால் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை – பாதி

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு.

முந்திரி – 8

மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

கசகசா – 1/4 டீஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 4

புதினா – சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!

download 91

Related posts

ஸ்பைசி நண்டு மசாலா

nathan

ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

nathan

Prawn Briyani / இறால் பிரியாணி

nathan

மட்டன் சுக்கா வறுவல் செய்ய….!

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

nathan

சிக்கன் – காலிஃப்ளவர் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

அவசர பிரியாணி

nathan

கோழி ரசம்

nathan