வயினில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால் இருப்பதால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பாதிப்படைந்திருக்கும் செல்களை சரிசெய்து, முதுமைத் தோற்றத்தை தடுக்கும். மேலும் பொலிவான சருமத்தை மட்டுமின்றி, சருமத்தை நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான சருமம் உள்ளவர்கள் ரெட் வயினை பயன்படுத்தும் போது, அது சருமத்தை ஈரப்பசையுடனும், மென்மையாகவும், குளிர்ச்சியுடனும் வைக்கும்.
ரெட் வயினை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். அதுவும் அதனை பஞ்சில் நனைத்து, சருமத்தை துடைத்தால், அவை சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு, மாசின்றி வைத்துக் கொள்ளும். மேலும் பருக்கள் வராமலும் தடுக்கும்.
ஒரு கப் ரெட் வயினை, ஒரு கப் தவிடுடன் சேர்த்து 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கொண்டு முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள மாசுக்கள் அனைத்தும் நீங்கிவிடுவதோடு, அதிகப்படியான எண்ணெயும் அகன்றுவிடும்.
ரெட் வயின் சருமத்தை சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சிறந்த பாதுகாப்பு தரக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.