1. முகப்பரு வடுக்கள் மறைய
கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
சந்தனத்தூள் – 5கிராம்
கசகசா – 10கிராம்
கறிவேப்பலை காய்ந்தது – 5கிராம்
இவற்றை நன்கு அரைத்து தயிரில் குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகப்பருமாறும். ஜாதிக்காயை அரைத்து அதனுடன் சந்தனத்தூள் சேர்த்துமுகத்தில் தடவி வந்தால் முகப்பருமாறும். முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, ரோஜா இதழ்களைப் பொடியாக்கி கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு நீங்கும்.
2. முகப்பரு நீங்க
சோற்றுக்கற்றாழை தோல் நீக்கியது – 1 துண்டு (2 இஞ்ச்)
செம்பருத்திபூ – 3
ரோஜாபூ – 1
வெந்தயம் – அரைஸ்பூன்
கஸ்தூரிமஞ்சள் – 5கிராம்
சந்தனத்தூள் – 5கிராம்
எடுத்து நன்றாக மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்த பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம்இருமுறை செய்துவந்தால் முகப்பருமறைவதுடன் முகமும் பளபளக்கும்.
3. கை கால் சுருக்கங்கள் மறைய
சிலர்கை, கால், முகச்சுருக்கங்கள் ஏற்பட்டு மனக்கவலையுடன் காணப்படுவார்கள். இவர்கள்,
கடலை மாவு – 10கிராம்
பாசிப்பயறு மாவு – 10கிராம்
காய்ந்தரோஜா இதழ் – 10கிராம்
காய்ந்த எலுமிச்சை பழத்தோல் தூள் – 10கிராம்
ஆரஞ்சு பழத்தோல் – 10கிராம்
இவற்றை எடுத்து இடித்து நீரில் குழைத்து சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் சுருக்கங்கள் மறையும். நன்கு பழுத்த பப்பாளிப்பழத்துண்டுகளை எடுத்து மசித்து முகத்தில் பூசிகாய்ந்தபின் முகம் கழுவிவந்தால் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் மாறுவதுடன் கருமை நிறம் நீங்கி முகம் பளபளக்கும்.