தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
ரவை – 1 கப்
தயிர் – அரை கப்
enos fruits salt or சமையல் சோடா மாவு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெள்ளை எள் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் – சிறிதளவு
ப.மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
செய்முறை :
• ஒரு அகன்ற பாத்திரத்தில் ரவை, ராகி மாவு, உப்பு, enos fruits salt or சமையல் சோடா மாவு, பெருங்காயத்தூள் போட்டு நன்றாக கலந்த பின்னர் அதில் தயிர், தண்ணீர் சேர்த்து திக்காக கட்டி இல்லாமல் நன்றாக கலந்த கொள்ள வேண்டும்.
• இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
• ஒரு வட்டமான தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கலந்த கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
• வெந்த டோக்ளாவை துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
• ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, எள், கறிவேப்பிலை, ப.மிளகாய் போட்டு தாளித்து டோக்ளாவில் போட்டு பிரட்டு எடுத்து பரிமாறவும்.
• சுவையான சத்தான ராகி டோக்ளா ரெடி.