29.6 C
Chennai
Thursday, May 22, 2025
sl4049
ஐஸ்க்ரீம் வகைகள்

கிட்ஸ் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

பிரெட் – 5 ஸ்லைஸ்கள்,
பால் – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் – 2 ட்ராப்ஸ்,
பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய், சீரக மிட்டாய் – தேவைக்கு.

அலங்கரிக்க…

விருப்பமான நட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

பாலை காய்ச்சி ஆற விட்டு ஜாதிக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து வெனிலா எசென்ஸ் சேர்த்து அதை ஃப்ரீசரில் சின்னச் சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்து அதை கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 4 மணி நேரம் கழித்து எடுத்து கிளாஸ் பவுலில் பிரெட் போட்டு அதன் மீது இந்த பால் ஐஸ்கிரீம் போட்டு, பிறகு பிரெட் மறுபடியும் ஐஸ்கிரீம் போட்டு மேலாக நட்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய் வகைகள் போட்டு கிளறி தரவும். பிரெட் முழுவதும் டேஸ்ட் இறங்கி சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.

sl4049

Related posts

மாம்பழ குச்சி ஐஸ்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

காரமல் பனானா ஐஸ்கீரிம்

nathan

பட்டர் புட்டிங்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan