31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

தேவையானவை: மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) – ஒரு கப், புளி – சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். அத்துடன் மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்து… புளி, உப்பு சேர்த்து மிக்ஸி யில் அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.
இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Related posts

காய்கறி கதம்ப சாதம்

nathan

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

nathan

தயிர்சாதம்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan