bc6658d3 0123 4ec7 857e 12083a8c591d S secvpf.gif
முகப் பராமரிப்பு

வெயிலில் சரும நிறத்தை பாதுகாக்கும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெர்ரி சருமத்தில் உள்ள அழுக்கை நீங்கி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. மேலும் சருமத்திற்கு அழுக்கை நீக்கி சருமத்தின் புரோட்டினை காக்கிறது. நிறத்தை கூட்டுகிறது. வயதான தோன்றத்தை தரும் சரும சுருக்கத்தை போக்குகிறது.

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்குகிறது. கோடை காலத்தில் சரும கருமை அடைவதை தடுத்து சருமத்தை காக்கிறது. கோடை காலத்தில் எண்ணெய் சருமம் கொண்டவர்களின் தோல் துளைகள் திறந்து கொள்கிறது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சாலிசிலிக் அமிலம் சரும சோர்வை போக்குகிறது. எலுமிச்சை சாறு தோல் துளைகளுக்கு டைனிங் மற்றும் புத்துணர்ச்சி உணர்வை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெர்ரி – 2
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்

செய்முறை :

அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஆனால் பிளெண்டர் போட்டு கலக்க கூடாது. கலந்த கலவையை முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை வாரம் இருமுறை செய்துவந்தால் வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் – 1 ஸ்பூன்
சோள மாவு – 1 ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி – 5

மேலே சொன்ன அனைத்தையும் நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து சூடு நீரில் கழுவவும். வெயில் காலத்தில் வெளியில் சென்று விட்டு வந்த பிறகு இந்த ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக்கை போட்டு வந்தால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
bc6658d3 0123 4ec7 857e 12083a8c591d S secvpf.gif

Related posts

உங்களுக்கு தெரியுமா விளக்கெண்ணெய் முடிக்கு தடவலாம்… ஆனா முகத்துக்கு தடவலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்?

nathan

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

முகத்தில் வளரும் முடியை அகற்ற இந்த பொருளை தினமும் உபயோகிங்க!!

nathan

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா?

nathan

கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…..

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

எண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி?

nathan