26.8 C
Chennai
Thursday, Dec 4, 2025
mutton thalakari varuval
அசைவ வகைகள்

மட்டன் தலைக்கறி வறுவல்

தேவையான பொருட்கள்:

* மட்டன் தலைக்கறி – 1/2 கிலோ

* வெங்காயம் – 3

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 2 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு – 6 பல்

* உப்பு – சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

mutton thalakari varuval

செய்முறை:

* முதலில் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் தலைக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில், மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, 1/4 டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் கழுவிய தலைக்கறியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் உள்ள நீரை வற்ற வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால் மட்டன் தலைக்கறி வறுவல் தயார்.

Related posts

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan

பட்டர் சிக்கன் செய்யலாம் வாங்க…

nathan

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

சுவையான ஆரஞ்சு சிக்கன்

nathan

மட்டன் பிரியாணி

nathan

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்

nathan

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு

nathan