kollu rasam.w540
​பொதுவானவை

கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க என்னவெல்லாமோ செய்திருக்கலாம். ஆனால் கொள்ளு பாவித்து பாருங்கள் கொழுப்பை உடன் கரைக்கலாம்.

தானிய வகைகளில் ஒன்று தான் கொள்ளு. ஆனால் அதுவே இன்று கொழுப்பைக் கரைக்கும் சக்தியாக மாறி உள்ளது.

கொள்ளு எப்படியெல்லாம் சாப்பிடலாம்.?

அவித்து துவையல் செய்து சாப்பிடலாம்.
ரசம் செய்து சாப்பிடலாம்.
கொள்ளு தண்ணீர்விட்டு அவித்து தண்ணீரை வடித்து குடிக்கலாம்.
கொள்ளை அவித்து தாளித்து சாப்பிடலாம்.

கொள்ளு ரசம் செய்வது எப்படி?

கொள்ளை சிவக்க 2 ஸ்பூன் அளவு எடுத்து வறுத்து கொள்ளவும். தவிர மீதியை வேக வைக்கவும்.

வாணலியில் துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பெருங்காயம், மிளகாய், கொள்ளு எல்லாம் வறுத்து பொடிக்கவும்.

புளியை நீர் விட்டு கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வறுத்து அரைத்த ரசப் பொடியை மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

உப்பும், வேக வைத்த கொள்ளை சேர்க்கவும். ரசப் பொடி காரம் பார்த்து உபயோகிக்கவும். கடுகு தாளித்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

மணமணக்கும் கொள்ளு ரசம் ரெடி. கொள்ளு ரசம் சளி, ஆஸ்துமா, கொழுப்பு உள்ளவர்களுக்கும், மழைக் காலத்துக்கும் ஏற்றது.
kollu rasam.w540

Related posts

சில்லி பரோட்டா

nathan

பெண்களின் அன்பை பெற எளிய அறிவுரைகள்

nathan

மோர் ரசம்

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

nathan

பூண்டு பொடி

nathan

ஓட்ஸ் கீர்

nathan

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

nathan