30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
lemon rice
சைவம்

எலுமிச்சை சாதம்

செ.தே.பொ:
பசுமதி அரிசி சோறு – 1 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
செ.மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
கடலை பருப்பு – 1 மே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மே.கரண்டி
கடுகு – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு
உப்பு – தேவைக்கேற்ப
வறுத்த கச்சான் – 1மே .கரண்டி
எலுமிச்சம்பழம் – பாதி

செய்முறை:-
* பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
* அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
* கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* 2-3 நிமிடம் வாசனை வரும்வரை பொரித்து, அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும்.
* இந்த தாளிதத்தில் சோற்றைப் போட்டு கிளறி இறக்கவும்.
** விரும்பினால் கூடுதல் சுவைக்கு 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் தாளிதத்தில் சேர்க்கலாம்.
** குறிப்பு : இந்த சாதம் கத்தரிக்காய் பொரிச்ச கறி, கடலைக்கறி, தயிர் போன்றவற்றுடன் சாப்பிட பிரமாதம்..பிரமாதம்..ம்ம்.
lemon rice

Related posts

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

nathan

பெரிய நெல்லிக்காய் சாதம்

nathan

தக்காளி – புதினா புலாவ்

nathan

கடலை கறி,

nathan

நாவூறும் நெல்லைச் சுவை: தாளகக் குழம்பு

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை

nathan