36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
நகங்கள்

வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’

ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள். அப்படிபட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். எகிப்தியர்கள் பெர்ரி மற்றும் இதர செடியில் உள்ள நீர்ச்சத்தை எடுத்து தங்களின் நகங்களுக்கு வர்ணம் பூசி அழகு சேர்த்தனர். நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக பிரபலமான இந்த நெய்ல் ஆர்ட் கலை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு புதிய ஃபேஷன் நடைமுறைக்கு வரும்போது அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஒரு ஃபேஷனை பின்பற்றி அசத்தும்போது நமக்கு அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வருவது இயல்பு தான். அந்த வகையில் அனைத்து வயது பெண்கள் மத்தியிலும் சக்கைப்போடு போடும் நெய்ல் ஆர்ட்டை குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம். அதில் பல வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணத்திற்கு எளிய பிரெஞ்சு நக கலை, மணிக் கோர்வை தோற்ற நகங்கள் அல்லது செய்தித்தாள் அச்சு வகை. உங்களுக்கு தேவையானதெல்லாம் செல்லோ டேப், தெளிமையான நக எனாமல், நக பூச்சு(நெயில் பாலிஷ்) போன்ற சில பொருட்களே. நக கலையை கையாளுவதற்கு முன்பாக பல வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். சரியாக பராமரித்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் அழகான நகங்களை பெறலாம்.

குறைந்த செலவில் வீட்டிலேயே நெய்ல் ஆர்ட்டை செய்துகொள்ள சில எளிய டிப்ஸ்….

நகங்களை நீள மாக வளர்ப்பது தான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பல ரிடையே நிலவுகிறது. ஆனாலும் நெளிணில் ஆர்ட்க்கு மிக நீளமான நகங்கள் சூட் ஆகாது. எனவே, நகங்களை சரியான அளவு வளர்த்து, அவற்றின் ஓரங்களை உங்கஷீமீ விருப்பம் போல் ஷேப் செளிணிதுகொஷீமீளவும்

ஷேப் செளிணித நகங் களின் மேல் டிரான்ஸ்ப ரன்ட் நெய்ல் பாலிஷினை பூசி அது காயும் வரை காத்திருங்கள் . நெளிணில் ஆர்ட் பல வகையான டிசைன்களை உடையது. உங்களது நகங்களை பிறரை கவரும்விதத்தில் அலங்கரிக்க உங்களுக்கு குறைந்தது 4 நிறங்களில் நெளிணில் பாலிஷ்கள் தேவைப்படலாம்.

உங்கள் மனதிற்கு பிடித்த டிசைன்களை தேர்வு செளிணியுங்கள். டிசைனை தேர்வு செய்யும்போது இன்னோவேடிவ்வாக யோசியுங்கள். பண்டிகைகள், மலர்கள், கார்ட்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்க்கு தேர்வு செய்ய தீம்கள் நிறைய உள்ளன.

உதாரணத்திற்கு நகங்களில் சுழல் போன்ற டிசைனை வரைய உங்களுக்கு 3 கலர் நெய்ல் பாலிஷ்கள் தேவைப்படும். ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக அடுக்கடுக்காக வரையலாம். இந்த டிசைன்தான். இப்போதைய டிரன்ட்.

உங்களிடம் 2 கலர் நெய்ல் பாலிஷ்கள் மட்டுமிருந்தால், ஒருகலரை நகங்கல் முழுவதும் பூசி மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசுங்கள். இந்தடிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும்.

நகங்களின் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள்,நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகள், முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

சிலர் நகங்களுக்கு கிராபிக் டிசைன்கள் போன்ற நெய்ல் ஆர்ட் செய்ய விருப்பப்பட்டால், உங்களுக்கு விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு நகத்தில் பூசினால், நீங்கள் எதிர்பார்த்த கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட் கிடைக்கும்.

இந்த வகை நக அலங்காரங்களுக்கு உங்களுக்கு பல நிறங்களில் நெய்ல் பாலிஷ்கள், வெவ்வேறு அளவிலான பிரஷ்கள் தேவைப்படும்.
மெல்லிய பிரஷ்களுக்கு, நீங்கள் உபயோகிக்காத நெய்ல் பாலிஷ் பிரஷ் களின் நீளவாட்டில் வெட்டிக் கொள்ளலாம்.

Related posts

நகங்களை அழகாக்கும் நெயில் ஸ்பா

nathan

நெயில் பாலிஷ் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்

nathan

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?nail care tips in tamil

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

விரல் நகங்களை பராமரிப்பது எப்படி?

nathan

நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க

nathan

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

nathan