தேவையானவை
கம்பு – 1 1/2 கப்
வெங்காயம் – 1
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – தாளிக்க
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
• முதலில் கம்பை அதன் பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும். பச்சை வாசனை போனதும் அடுப்பை அனைத்து குளிர வைத்து மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பொடித்த பின் சலித்து மாவை தனியாகவும் மீதி ரவை போல் உள்ளதை தனியாகவும் எடுத்து வைக்கவும்.
• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறம் ஆனவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
• பின்னர் அதில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
• தண்ணீர் கொதி வந்ததும் உடைந்த கம்பு போட்டு (ரவை போல் உள்ளதை) வேக விடவும்.
• கம்பு வெந்ததும் மீதியுள்ள கம்பு மாவு பொடிகளை போட்டு கிளறி கொண்டு இருக்கவும். அப்போது தான் கட்டியாக ஆகாது.
• உப்புமா பதம் வந்ததும் துருவிய தேங்காய் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
• இந்த கலவை சற்று குளிர்ந்ததும் கொழுக்கட்டை போல் உருட்டி இட்லி தட்டில் வைத்து 8-10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
• இதை தேங்காய் சட்னி அல்லது நிலக்கடலை சட்னி சேர்த்து பரிமாறலாம்.