27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
IMG 1242 e1454311603335
அசைவ வகைகள்

வறுத்த கோழி குழம்பு

கோழி – அரைக் கிலோ
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
வர மிளகாய் – 8
மல்லி – 4 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – 3 இன்ச் அளவு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் – ஒரு கப்
தாளிக்க தேவையான பொருட்கள்:
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 3

Preparation

கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து, கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி. இந்த குறிப்பை செய்து காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. மாலதி மோகன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.
IMG 1242 e1454311603335

Related posts

ஸ்பைசி முட்டை மசாலா

nathan

நண்டு மசாலா

nathan

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

nathan

கணவாய் மீன் வறுவல்

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான தந்தூரி சிக்கன்

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

மசாலா ஆம்லெட்

nathan