25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
22 624bc3
Other News

இந்த ராசிக்கும் 2025 வரை தலையெழுத்து மாறும் – சனிப்பெயர்ச்சி

நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசி லக்னகாரர்களுக்கு சசயோகத்தை தரப்போகிறது.

ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன் 2022 – பணம் தேடி வந்து கதவை தட்டும்…கூடவே கெட்டிமேளச்சத்தமும் கேட்கும்

 

சச யோகம் என்றால் என்ன?
சச யோகம் பெறுவது அரிதான யோகம். சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும்.

சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான்.

இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் 2022 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

2022 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டம் விலகும்?

ரிஷப ராசி – ரிஷப லக்னம்
ஏப்ரல் இறுதியில் சனி பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கேந்திரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகமாகும். சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ரிஷப ராசி லக்னத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சசயோகமாக அமையப்போகிறது.

சிம்ம ராசி-சிம்ம லக்னம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலத்தில் சனிப்பெயர்ச்சி சசமகா யோகத்தை தரப்போகிறது. நிர்வாகத்திறன், தலைமை பதவியை ஏற்க வைப்பார்.

கோச்சாரரீதியாக சனி வருபவர்களுக்கும் உயர்பதவிகள் தேடி வரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சிம்ம ராசி சிம்ம லக்னத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அற்புதமான தருணமாக அமையும்.

சூரியனின் அருளால் அடுத்த 3 ராசிக்கு ஏற்படும் யோகம் என்னென்ன?

விருச்சிக ராசி – விருச்சிக லக்னம்
சனிபகவான் விருச்சிக ராசி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அமரப்போகிறார். அர்த்தாஷ்டம சனி என்றாலும் அதிர்ஷ்டமே.

நினைத்தது நிறைவேறும். இதுநாள்வரை வம்பு வழக்குகள் என்று இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பல நல்ல பலன்களைத் தரப்போகிறார். எதிரிகள், கடன்கள், நோய்கள் பிரச்சினைகள் தீரும்.

இந்த காலகட்டத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு யோக ஜாதகமாக அமையும். மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக தேர்ச்சியடையும் யோகம் வரும்.

கும்ப ராசி – கும்ப லக்னம்
கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். லக்னம், ராசியில் சனி ஆட்சி பெற்று அமர்வது சசியோகம் தரும் அமைப்பாகும்.

கும்பத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலை அடைந்து சச யோக பலன்களைத் தருவார்.

கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.

Related posts

உத்திரட்டாதி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரங்கள்

nathan

உல்லாசம் மனைவியிடம் வசமாக சிக்கிய காவல் அதிகாரி!!

nathan

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பல்லவியின் புகைப்படங்கள்

nathan

Zendaya Reveals her Favorite Looks from her New Boohoo Campaign

nathan

சனியும் ராகுவும் சேர்ந்து கஷ்டத்தில் துவம்சம் செய்யப்போகும் ராசிக்காரர்கள்

nathan

கேன்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று ரூ.75 கோடி ஈட்டும் உணவக உரிமையாளர்!

nathan

புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..

nathan

மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகோதர-சகோதரிகள்!

nathan