25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
சரும பராமரிப்பு

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

தமிழர்களின் அழகே கருப்பு தான். ஆனால் வெள்ளைத் தோலின் மீது தான் மோகம் அதிகம் இருக்கும். அதனால் பலரும் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அதிலும் விலை குறைவாக உள்ள ஃபேர்னஸ் க்ரீம்கள் தான் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்று, பலரும் விலை அதிகம் உள்ள ஃபேர்னஸ் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் அதுவும் க்ரீம் தான். அது எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும், அதில் மட்டும் கெமிக்கல் சேர்க்காமல் இருக்காது. மேலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இத்தகைய தொடர்ச்சியான பயன்பாட்டால் இளமையிலேயே முதுமை தோற்றத்தைக் கூடய பெறக்கூடும்.

சரி, இப்போது ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சந்திக்கக்கூடும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சருமம் சென்சிடிவ் ஆகிவிடும்

தொடர்ச்சியான ஃபேர்னஸ் க்ரீம் பயன்பாட்டினால், சருமம் மிகவும் சென்சிடிவ்வாகிவிடும். பின் வெயிலில் சென்றால் கூட, சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சில நேரங்களில் கொப்புளங்கள் என ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் போட்டால் கூட, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படும்.

பருக்கள் அதிகமாகும்

சில ஃபேர்னஸ் க்ரீம்கள் சிலருக்கு ஒப்புக் கொள்ளாது. இருப்பினும் அதிக பணம் கொடுத்து வாங்கிவிட்டோம் என்று சிலர் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் அதிகரித்து, அதனால் சருமத்தின் அழகு கெடும்.

சரும சுருக்கம்

ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை தளர்ந்து, விரைவில் சுருக்கங்கள் விழுந்து, முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

சரும புற்றுநோய்

சில நேரங்களில் ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள மெர்குரி, ஹைட்ரோகுவினோன் மற்றும் ஸ்ட்ரெடாய்டு போன்ற கெமிக்கல்கள் இருப்பதால், இவற்றை சருமத்தில் தடவி சூரியக்கதிர்களின் தாக்கத்தில் நீண்ட நேரம் இருந்தால், அதனால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கருமையாக்கும்

சில ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்களால் சருமத்தின் நிறம் கருமையாகக்கூடும். எனவே எந்த ஒரு ஃபேர்னஸ் க்ரீம்மையும் பரிசோதித்துப் பார்க்காமல் பயன்படுத்த வேண்டாம்.

குறிப்பு

கடவுள் நமக்கு கொடுத்த அழகை கண்ட கண்ட க்ரீம்களைக் கொண்டு பராமரித்து கெடுத்துக் கொள்ளாதீர்கள். முதலில் கருப்பை வெறுக்க வேண்டாம். உண்மையில் வெள்ளை நிறத்தை விட கருப்பே அழகு. மேலும் அழகை அதிகரக்கவும், பராமரிக்கவும் வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துங்கள். இதனால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

05 1433487049 6 salicyliccream

Related posts

பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…

sangika

வெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!!!

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றும் மசூர் தால் !!

nathan

உங்கள் சருமத்தை பளபளக்க ஆரஞ்சு தோல்.. beauty tips..

nathan

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

nathan

கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan

அதிரடி அழகுக் குறிப்புக்கள்!

nathan