28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
rasi todayjaffna
அழகு குறிப்புகள்

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

புதன் பெயர்ச்சி 2022: அறிவுக்கும், ஆற்றலுக்கும் அதிபதியாக இருப்பவர் புதன். ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வேலை, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. இந்நிலையில், புதன் 20 ஆம் தேதி முதல் கன்னி ராசியில் நீச்சமடைந்து, பின் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். நவம்பர் 19ம் தேதி வரை புதன் அங்கே தங்கியிருப்பார். இங்கு புதன் சூரியன், சுக்கிரன் மற்றும் கேதுவுடன் இணைவார். அவர்களின் நிலை காரணமாக, நான்கு ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன் ஏற்படும். இதனால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பணத்தை இழக்க நேரிடலாம். இதன் காரணமாக வீட்டின் நிதி நிலை மோசமடையக்கூடும். இந்த ராசிக்காரர்கள் கூட விபத்துகளுக்கு கூட ஆளாக நேரிடும்.

ரிஷபம்

துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் சருமம் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும்.

விருச்சிகம்

புதனின் ராசி மாற்றத்தின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையாகவே இருக்கும். இவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்யாமல் இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்திலோ அல்லது பணியிடத்திலோ எதிரிகளை சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் துலாம் ராசியில் புதன் நுழைவதால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அதிகரிக்கும் செலவுகள் மன அழுத்தத்தைக் கொடுக்கும். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காது. குடும்ப உறவுகள் மோசமடையலாம். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியினால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எனவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். தாயின் உடல் நிலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அவரது உடல்நிலை பாதிக்கப்படலாம்

Source:zeenews

Related posts

சூப்பர் டிப்ஸ் பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

nathan

ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும் முட்டை

nathan

காய்கறி ஃபேஷியல்:

nathan

வைரல் வீடியோ! நடுகடலில் படகில் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிகள்

nathan

வித விதமா சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி

nathan

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan