தேவையான பொருட்கள் :
செம்பருத்தி பூ – 6
தோசை மாவு – 250 கிராம்
நல்லெண்ணெய் – தேவைக்கு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் – 2
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* செம்பருத்தி இதழ்களை அரைத்து தோசை மாவுடன் கலக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பலை சேர்த்து கலந்து தோசை வார்த்துக் கொள்ளவும்.
* குழந்தைகளுக்கு சூட்டினால் இருமல் உண்டாகும்போது இந்த தோசையை வார்த்துக் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் இதை சாப்பிட்டு வருவது மிக நல்லது.