29.3 C
Chennai
Sunday, Jul 27, 2025
brinjal bajji 01 1454328313
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

இதுவரை கத்திரிக்காய் கொண்டு வறுவல், சாம்பார், பொரியல் செய்து தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாலையில் சாப்பிடுமாறு பஜ்ஜி செய்து சுவைத்ததுண்டா? ஆம், கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்தால், அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த கத்திரிக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


brinjal bajji 01 1454328313

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1/2 கிலோ (சிறியது)
கடலை மாவு – 2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் – 8 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கத்திரிக்காயை நீரில் கழுவி, அதனை மலர் விரிவது போன்று நான்காக வெட்டிக் கொள்ளவும்.

பின் அதன் நடுவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், சமையல் சோடா, ஓமம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அனைத்து கத்திரிக்காய்களையும் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

இறுதியில் அதே வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பின் ஒவ்வொரு கத்திரிக்காயையும் கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி!!!

Related posts

ரவா மசாலா இட்லி

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

nathan

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan

சுவையான வாழைப்பூவில் பக்கோடா

nathan

சுவையான அரிசி முறுக்கு செய்ய…!

nathan

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்!

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan