31.2 C
Chennai
Tuesday, Jul 22, 2025
sl956
சைவம்

நெல்லிக்காய் சாதம்

சாதம் – 2 கப்
நெல்லிக்காய் – 2 முதல் 3 வரை
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணை – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்

நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். அல்லது துண்டுகளாக நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டி சிவக்க வறுக்கவும்.

பருப்பு சிவந்ததும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய அல்லது அரைத்த நெல்லிக்காயைப் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் உப்பு, சாதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்து மீண்டும்

ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.காய்கறி கூட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.காரம் தேவையென்றால், பச்சை மிளகாயை நெல்லிக்காயுடன் அரைத்து சேர்க்கவும்.
sl956

Related posts

சிம்பிள் ஆலு மசாலா

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

புளியோதரை

nathan

சுவையான காளான் குழம்பு

nathan

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

கடலை கறி,

nathan

பட்டாணி பிரியாணி

nathan

இஞ்சி குழம்பு

nathan